தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் , நேற்று ( புதன்கிழமை) அதிகாலை, நாங்கர்ஹார் மாகாணத் தலைநகர் ஜலாலாபாதில், விமான நிலையம் அருகில் உள்ள, கட்டுமான நிறுவனத்துக்குள் மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது என அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐந்து தற்கொலை போராளிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேராளிகள், முதலில் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர் மற்ற மூவரும், கட்டுமான நிறுவனத்தில் இருந்தவர்களை நோக்கி, சரமாரியாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில், மூன்று போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப் படை தாக்குதலில், 17 பேர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 10 பேர் தனியாருக்கு சொந்தமான குறித்த கட்டுமான நிறுவன தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.