1995 தலிபானால் சிறைபிடிக்கப்பட்டு உயிரிழந்த ஹசாரா தலைவர் அப்துல் அலி மசாரியின் நினைவு நாளுக்காக ஷியா முஸ்லிம்களான ஹசாரா சிறுபான்மை உறுப்பினர்கள் பெருந்திரளாக கூடியிருந்த இடத்தில் இன்று (வியாழக்கிழமை) வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தன. தாக்குதலுக்கு எவரும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.
ரொக்கெட்டுகளை ஏவி இந்த வெடிப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் காயமடைந்துள்ளனர் என ஆப்கான் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.