
14 வயதான சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சிறுவனை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சிறுவன் காணாமல் போவதற்கு முன்னர் கருப்பு மற்றும் வெள்ளை பேஸ்போல் தொப்பி, நீல நிற ஆடை அணிந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போயுள்ள சிறுவன் குறித்து தகவல் அறிந்தவர்களை 911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
