ஆண்டவருக்கு அஞ்சுவோர் முன்னேற்பாடாய் இருப்பர். அவர்தம் திருமுன் தங்களைத் தாழ்த்திக் கொள்வர்.
ஆண்டவரின் கைகளில் நாம் விழுவோம்| மனிதரின் கைகளில் விழ மாட்டோம், ஏனெனில், அவருடைய பெருமையைப் போன்று அவரது இரக்கமும் சிறந்தது என்று அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.”
கடவுளிடம் தஞ்சம் புகுவோர் எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையேயில்லை. அவரே நமது பாதுகாப்பும், அரணுமாக இருப்பார். தீமை அதை நெருங்கவே முடியாது. அவர் நம்மைப் புல்லுள்ள இடங்களின் மேற்கே அமர்ந்த தண்ணீரண்டை அழைத்துச் செல்வார்.
ஆறாம் நிலை
இயேசுவின் திருமுகத்தை வெரோனிக்காள் துடைக்கிறாள் .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“எனக்குத் தீமை செய்தோரை எதிர்ப்பது யார்? என் சார்பாக எழுந்து பேசுவது யார்? தீமை செய்தோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?
“ஆண்டவர் எனக்குத் துணை செய்திராவிடின், விரைவாகவே என் ஆன்மா கீழுலகம் சென்றிருக்கும்.
“ ‘இதோ என் நடை தள்ளாடுகிறது ’ என்று நான் நினைக்கையில், ஆண்டவரே, உம் அருள் என்னைத் தாங்குகிறது.” (சங். 93 : 16 – 18)
படரத் துடிக்கும் கொடிக்கு அங்கே கொழுகொம்பு அவசியம்; அது இயற்கை நியதி!
வாழ்வில் துடிக்கும் உயிருக்கு உதவிக்கரம் அங்கே நீள வேண்டியதும் அவசியம்.
தேவையென்றால் ரோஜா மலர் பறிக்க அதன் மரத்தின் முட்களின் உறுத்தலை நாம் தாங்கிக் கொள்வதில்லையா? அவசியமென்றால் எம் உயிரையே பணயம் வைத்து நமக்கொரு நன்மையைத் தேடிக் கொள்வதில்லையா?
புற்றைக் கட்டச் சிரமப்படுகிறது கறையான்;| அது தான் குடியமரவா அதைக் கட்டுகிறது?
அயலவன் துன்பத்தில் ஆறுதல் கொடுக்க நமக்கு இன்னுமேன் தயக்கம்? நம் பயணத்தில் நடை தளர்ந்து தள்ளாடும்போது இறைவன் என்னைத் தாங்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்கிறோம்.
அடுத்தவனின் கால் பலமிழக்கும்போது, கால் கொடுக்க வேண்டாம், ஒரு தோள் கூடவா கொடுத்து அவனை உறுதிப்படுத்தக் கூடாது?
சிந்திப்போம்:
எனக்கு வரும் தீங்கையும், இழப்பையும் எண்ணாமல் அடுத்தவர் கண்ணீரைத் துடைக்கின்ற மனம் தந்த இறiவா உமக்கு நன்றி!
துன்பம் வரும் நேரத்தில் ‘இதோ இவன் இருக்கிறான்;, இவள் இருக்கிறாள்’ என்று என்னைப்பற்றி அடுத்தவர் நம்பிக்கை கொள்ளும்படியாக நான் நடந்து கொள்ள அருள் தந்தமைக்காக உமக்கு நன்றி இறiவா!
பலன் எண்ணிப் பணி செய்யாமல், மற்றவர் மனம் எண்ணிப் பணி செய்ய எனக்கு நல்ல மனம் தந்த இறiவா உமக்கு நன்றி!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்