வட ஆபிரிக்க நாடான துனீசியா தலைநகர் துனிஸில் உள்ள வைத்தியசாலையொன்றில் 11 குழந்தைகள், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பதவியை ஏற்று நான்கே மாதங்களான அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டேரௌப் ஷெரிஃப், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மருத்துவ பாதுகாப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகளே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குக்குமாறு பிரதமர் யூசுப் சாஹெட் உத்தரவிட்டுள்ளார்.
வட ஆபிரிக்காவில், மருத்துவம் மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு அதிகம் பேணப்படும் நாடாக, துனீசியா காணப்பட்டது.
எனினும், 2011 ஆம் ஆண்டு, ட்சைன் எல் அபிடைன் பென் அலி ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், துனீசியாவில் பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்துப் பற்றாக்குறை என்பன நிலவிவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.