ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியிலுள்ள குண்டுஸ் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது.
இந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த 30 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 பேர் குழந்தைகள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட்சன் கூறும்போது, ‘குடிமக்களைக் காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஆனால் தலிபான்கள் பொதுமக்களை வேண்டும் என்றே மறைத்து வைத்தனர்’ என குறிப்பிட்டுள்ளார்.