நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமிங்கலம் மோதியதில் 15 சென்றி மீற்றர் நீளத்திற்கு கப்பல் நடுப்பகுதியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கிலத்தால் ஏற்பட்ட பாதிப்பு என உறுதிப்படுத்தியுள்ளனர். கப்பலில் பயணித்த பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த சமயத்தில் இருந்த கப்பல் பணியாளர்களும் பயணிகளும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஐந்து பேர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார். மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் அந்த கப்பலின் இறக்கையும் இந்த மோதலில் சேதமடைந்தது.