கொல்கத்தாவில் சட்டவிரோதமாக வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொல்கத்தாவின் பி.டி.வீதியினூடாகப் பயணித்த பாரவூர்தி ஒன்றில் இருந்து 1,000 கிலோ ‘பொட்டாசியம் நைட்ரேட்’ வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொல்கத்தா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.