அவர்களை வைத்து வியாபாரம் செய்யும் அளவிற்கு நம்மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். பொதுவாக சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள் அல்லது பிரபல திரைப்படங்களின் பெயர்களை கொண்டு பொருட்கள் தயாரிக்கப்படுவதும், ஆடைகள் விற்கப்படுவதும் கடந்த காலங்களில் வியாபார உத்திகளாக இருந்தன.
ஆனால், வியட்நாமில் சந்தித்துக் கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோரை வைத்து அயர்லாந்து உணவு தயாரிப்பு நிபுணர் ஒருவர் பேகர்களை தயாரித்து வருகிறார்.
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள ‘டேர்ட்டி பேர்ட்’ என்ற விருந்தகத்தில் இரண்டு வகையான பேகர் சிற்றுண்டிகள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன.
The ‘Durty Donald’ மற்றும் ‘Kim Jong Yum’ என்ற பெயர்களில் குறித்த பேகர் வகைகள் வியட்நாம் தலைநகரில் இன்று காலை முதல் பிரபலமடைந்து வருகின்றன.
வியட்நாமுக்கு சுற்றுலா சென்றுள்ள கனடா சுற்றுலா பயணியான பெட்ரிசியா வில்சன் என்பவர் இதனை அறிந்து ‘டேர்ட்டி பேர்ட் விருந்தகத்திற்கு சென்றுள்ளார்.
விருந்தகத்தில் வழங்கப்பட்ட பேகர்களை சுவைத்து பார்த்த அவர், “ஒவ்வொரு தடவையும் பேகரை உண்ணும்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நினைவுபடுத்துகின்றது. மிகவும் காரமாக பலசரக்குகள், இரட்டை மாட்டிறைச்சி துண்டுகள், பன்றிஇறைச்சித் துண்டுகள் மற்றும் கோழியிறைச்சியின் பாகங்கள் இதில் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த இரண்டு பேகர்களும் இரண்டு அரச தலைவர்களிடையே இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் மற்றும் அவர்களின் அமைதிப் போக்கை பாராட்டும் வகையில் அமைந்துள்ளதாக விருந்தகத்தின் இணை உரிமையாளர் மற்றும் தலைமை சமையல் நிபுணர் கொலின் கெல்லி தெரிவித்துள்ளார்.