LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 23, 2019

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன: மே-யின் செய்தித்தொடர்பாளர்

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டுவதற்கான பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பிரதமர் தெரேசா மே-யின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்ள மாற்றங்களை ஒப்பந்தத்தில் ஏற்படுத்தும் பொருட்டு ஐரோப்பிய தலைவர்களுடன் தெரேசா மே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறார்.

கடந்த இரண்டு வாரங்களில் 26 ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மே இந்த வார இறுதியில் எகிப்தில் உச்சிமாநாடொன்றில் கலந்துகொண்டு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் மேலதிகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் மாற்றங்களை பெறுவதற்காகவும் பிரெக்ஸிற் செயல்முறையில் முன்னேற்றத்தை எட்டும் நோக்கத்துடன் பிரதமர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7