LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, February 22, 2019

அரசியலமைப்பு பேரவையில் உள்ள அனைவரும் சுயமாக பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி!

மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினராக எவ்வித கடமைகளையும் இதுவரையில் பொறுப்பேற்காத நிலையில் பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும் என செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,”அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் தெரிவிற்கு எதிர்தரப்பினராகிய நாம் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினையே தெரிவித்தோம்.

அரசியல்வாதிகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும் பொழுது அங்கு சுயாதீனத்தன்மை காணப்படாது. நடைமுறையில் இத்தன்மையே அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற்றது.

பிரதமர் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவானவர்களை முக்கிய நிறுவனங்களுக்கு நியமித்தார், சபாநாயகரும் அவரது கொள்கையினையே பின்பற்றினார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி தனது அதிருப்தியினை வெளிப்படுத்தியிருந்தார்.

அரசியலமைப்பு பேரவையினை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை ஆகவே அப்பேரவையினால் எவ்விதமான பயனும் கிடையாது.

தற்போது எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அப்பேரவையின் உறுப்பினராக எவ்வித கடமைகளையும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை. ஆகவே அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7