இச்சம்பவம் பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள ரொனி கார்னியர் அரங்கில் இடம்பெற்றுள்ளது.
அனர்த்தத்தின்போது குறித்த அரங்கில் சுமார் 4000 பேர்வரையில் இருந்ததாகவும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மின்னொழுக்கு காரணமாகவே குறித்த தீ விபத்து இடம்பெற்றதாக பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அரங்கத்திலிருந்த தானியங்கி சமிஞ்ஞை ஒலி எழுந்ததால் பார்வையாளர்கள் அவதானத்துடன் உடனடியாகவே வெளியேறத் தொடங்கியிருந்தனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.