LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 24, 2019

கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வுக்கெதிரான அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

(பாண்டி)
கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கெதிராக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், தற்போதைய விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதென கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினரும், மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் திட்ட முகாமையாளருமான எஸ்.எம்.தாஹிர் தெரிவித்துள்ளார்.

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் கருத்துக்கு இன்று பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு தெரிவித்த போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பி பின்னடைவை நோக்கிச் செல்லும் கல்வியை முன்னேற்றும் நோக்கில் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு முன்னெடுப்புக்களைச் செய்து வருகிறார்.

ஆளுனர் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்குள் கடமை புரியும் ஆசிரியர்கள் அனைவரும் தமது சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற கருத்தைத் தெரிவித்தாரே தவிர வெளி மாகாணத்தில் கடமை புரியும் ஆசிரியர்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் கருத்தை வித்தியாசமான கோணத்தில் திசை திருப்பி மறுதலிக்கும் வகையில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான இராதாகிருஷ்ணன் நடைமுறைச்சாத்தியமற்றதெனவும் இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்வது நிர்வாகச்சிக்கலை ஏற்படுத்துமென்றும், அவ்வறிக்கையை ஆளுநர் உடன் வாபஸ் பெற வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையினை முன்னேற்றும் நோக்கில் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஆளுனர் வெளியிட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கது. கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் சமநிலையைப் பேணும் நோக்கிலுமே ஆளுநர் குறித்த கருத்தை வெளியிட்டார். இது மாகாணத்தில் எந்தவொரு முஸ்லிம், தமிழ் பாடசாலைகளையும் பாதிக்காதென்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு, அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என வாகரை வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் மேலும் தெரிவித்துள்ளார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7