LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 26, 2019

இராணுவ அதிகாரிகாரிகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

பாதுகாப்புபடை வீரர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம்  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்திய யூனியன், பாதுகாப்புத்துறை அமைச்சகம், ஜம்மு காஷ்மீர் அரசு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

இராணுவ அதிகாரிகாரிகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை பாதுகாக்க இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகள் தொடரந்த வழக்கை இன்று (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக் கொள்கின்றது.

இந்த வழக்கில் பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை பாதுகாக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகின்ற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்த வழக்கின் மூலம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்தவகையில்,காஷ்மீரில் பாதுகாப்புபடை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த வழக்கில் எதிர் தரப்பினராக கருதப்படும் மத்திய அரசு, இராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7