LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, February 26, 2019

புதிய அரசியலமைப்புக்கு அங்கீகாரம் வழங்கினர் கியூப மக்கள்

கியூபாவின் அரசியலமைப்பு வாக்கெடுப்பு முடிவுகள்,  புதிய அரசியலமைப்பை 87 சதவீதமான கியூப வாக்காளர்கள் அங்கீகரித்துள்ளதை வெளிப்படுத்துவதாக கியூப தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று ஹவானாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தேர்தல் ஆணையம் இவ்வறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

ஞாயிறன்று இடம்பெற்ற பொதுஜன வாக்கெடுப்பில் 8.7 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்களில் 7.8 மில்லியன் வாக்காளர்கள் பங்கேற்றனர். புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக சுமார் 6.8 மில்லியன் வாக்காளர்களும் எதிராக 706,400 பேரும் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணைய தலைவர் அலினா பெல்சீரோ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு திருத்த செயல்முறை கடந்த ஆண்டு கியூப மாநில கவுன்சில் தலைவர், மிகுவல் டயஸ்-கெனலினால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்கள் நாடாளுமன்றத்தினால் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  கடந்த டிசம்பர் 22 இல்  நாடாளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பெரும்பாலான வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்ட இப்புதிய அரசியலமைப்பானது தற்போது நடைமுறையில் உள்ள 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு பதிலாக அரசாங்கத்தால் அமுலாக்கப்படும் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7