அந்தவகையில், தீவிரவாத முகாம் மீதுதாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் சுரு பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர், “இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். யாரிடமும் இந்தியா அடிபணியாது. எதற்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன். இன்று காலை இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை நினைத்து பெருமை கொள்கின்றேன்.
அந்தவகையில், விமானப்படைக்கு தலைவணங்குகிறேன். இன்று இந்தியாவின் அசாத்தியமான உள்ளங்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இதுவாகும். இந்தியா மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 7.5 இலட்சம் கோடி ரூபா சேர்க்கப்படும். இதற்காக விவசாயிகள் எதுவும் செய்ய தேவையில்லை. அவர்களது தொலைபேசி கணக்கில் பணம் வந்துவிட்தாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் பொதுமக்கள், முன்னாள் இராணுவ வீரர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.