டில்லி முதல்வர்அரவிந்த் கேஜரிவால் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார், அவர் மேலும் கூறும் போது,
“2019 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக போட்டியிட்டால் தில்லியில் பாஜகவை எளிதில் வீழ்த்திவிடலாம். ஆனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையிலான கூட்டணி அமையவில்லை.
எனினும் பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி கடுமையான நெருக்கடியை கொடுக்கும்.
காங்கிரஸ் கட்சி டில்லியில் ஆம் ஆத்மியை வலுவிழக்கச் செய்கிறது. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜவாதி கூட்டணியை வலுவிழக்கச் செய்கிறது. இதே நிலை தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கும் நடக்கிறது” என கூறினார்.
முன்னதாக, டில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்ஷி்த், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் டில்லியில் தனித்துப் போட்டியிட்டு, 7 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.