அத்தோடு வாக்கெடுப்பு முடிவுகளை ஜப்பான் அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளுகின்ற போதிலும், 20 ஆண்டுகள் பழைமையான, அமெரிக்க இராணுவத்தளத்தை வேறிடத்துக்கு மாற்றும் திட்டத்தைத் தாமதப்படுத்த முடியாதென அவர் கூறினார்.
ஒகினாவா தீவு அமெரிக்க இராணுவ வசதிகளின் பெரும்பகுதியை ஜப்பானுக்கு வழங்கி வருகின்றது. இருப்பினும், அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்றுவரும், விபத்துக்கள் மற்றும் குற்றச் செயல்கள், உள்நாட்டு மக்களிடம் குறித்த இராணுவத்தளம் தொடர்பிலான எதிர்ப்பினைத் தோற்றுவித்துள்ளது.
குறித்த படைத்தளத்தை மாற்றுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்ட போதிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், 72 வீதமான வாக்காளர்கள் இந்த நடவடிக்கையினை எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் படைத்தளம் ஒகினாவா தீவிற்கு மாற்றும் அவசியத்தை நாம் தவிர்க்க முடியாது, உலகில் மிகவும் ஆபத்தான தளமாக இருக்க வேண்டும் என்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே குறிப்பிட்டுள்ளார்.