காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து சுமார் 3 மணி நேரம் கழித்து, பாகிஸ்தான் நாட்டின் ஆளில்லா விமானம் குஜராத்தின் கட்ச் பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இந்தநிலையில், இந்திய பாதுகாப்புப்படை பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு உடனடியாக பாகிஸ்தான் நடத்திய பதிலடி முயற்சி இதுவென கருதப்படுகின்றது.
ஆளில்லா விமானம் எனப்படும் சிறியவகை உளவு கருவிகள் பறக்கவிடப்பட்டு இவை, பறக்கும் இடங்களில் உள்ள நிலைமையை ஔிப்படமாக எடுத்து அனுப்பும் திறமை கொண்டவை. இந்திய எல்லை பாதுகாப்பை உளவு பார்க்க இவை அனுப்பப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.