நேற்று வடகொரியா தலைவர் கிம் தனது பச்சை மற்றும் மஞ்சள் ரயிலில் வியட்னாம் டேங் டோங் ரயில் நிலையத்தை அடைந்தார். அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கிடையில் கடந்த வருடம் சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினைத் தொடர்ந்து, 8 மாதங்களின் பின்னர் இரண்டாவது சந்திப்பு இடம்பெறவுள்ளது.
வியட்நாம் தலைநகர் ஹனோயின் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள இச்சந்திப்பிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.