குறித்த வழக்கு விசாரணையானது இன்று (திங்கட்கிழமை) பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அல்-அஜீலியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் உள்ள கோட் லக்பாத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உடல்நிலையை காரணம் காட்டி பிணை மனு கோரி, அவர் சார்பாக சட்டத்தரணியால் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு பிணை வழங்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் நவாஸ் ஷெரீப்பின் உடல் நலம் மோசமாக இருப்பதால் பிணை கோரி, மீண்டும் நீதிமன்றத்தை அணுக இருப்பதாக பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.