டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “உலகளாவில் தற்போது அணு ஆயுத விவகாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப் பெறுவது என்பது எளிதாகி உள்ளது. இதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. பல்வேறு நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை நவீனமாக்கி வருகின்றன.
எனவே, அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அணு ஆயுத தடை தொடர்பான விரிவான, நவீன அமைதித் திட்டங்களைக் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா தான். பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால், அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் அணு ஆயுத விவகாரத்தில் சுமார் 25 ஆண்டுகள் வரை சுய கட்டுப்பாட்டுடன் இருந்தது. அதனால்தான் அணுசக்தி விநியோக நாடுகள் குழு, கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியது” எனக் கூறினார்.