LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 23, 2019

அரசியலமைப்பு பேரவை தொடர்பான மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதில்

அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

அத்துடன், அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் ஆகியோரே தற்போதுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

இவர்களைத் தவிர, சமல் ராஜபக்ஷ இருந்ததாகவும் அவரும் இராஜினாமா செய்துவிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். தற்போது யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இன்று (சனிக்கிழமை) பதிலளித்துள்ளனர்.

அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குறிப்பிடுகையில், “ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரத்தை குறைப்பதனையே அரசியலமைப்பு பேரவையின் ஊடாக எதிர்பார்த்தோம்.

ஆனால், அரசியலமைப்பு பேரவையிலுள்ளவர்கள் தொடர்பான மாற்றம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைய மாற்றமடைய வேண்டும் எனின், அதனை முன்னெடுக்க வேண்டும் என நான் எண்ணுகின்றேன். எனினும் அதனை விடுத்து அரசியலமைப்பு பேரவையை இல்லாது செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இது தொடர்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் நாமல் கருணாரத்ன குறிப்பிடுகையில், “நல்ல நோக்கத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட விடயத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன, சுயாதீனம் இல்லை என எவரேனும் கூறுவார்கள் எனி, சுயாதீனத்தன்மை ஏற்படும் வகையில் அதனைத் தயாரிக்க வேண்டும். அதனை விடுத்து பிரச்சினையொன்றை நீடிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7