அந்தவகையில், ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளக் பந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஒருநாள் ஒஸ்கார் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இவ்வருடம் ஒஸ்கார் விருது பெற்ற கலைஞர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ஒஸ்கார் கதவருகே விக்னேஷ் சிவன் நிற்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள அவர், ‘ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனின் இந்த டுவிட்டுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இயக்குநருக்கான அல்லது பாடலாசிரியருக்கான ஒஸ்கார் உங்களுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.