LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 23, 2019

மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக்கூடாது – ரவிகரன்

மக்களின் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசக் கூடாது என வட. மாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யுத்தத்தின்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிய கேப்பாப்பிலவு மக்களிடம் வடமாகாண ஆளுநா் ஆவணங்களை கேட்பது உகந்ததல்ல என்றும் அவர் கூறினார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து மாகாண சபையின் முன்னாள் உறுப்பினா் து.ரவிகரன் யாழ்.ஊடாக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநா் சுரேன் ராகவன் அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கேப்பாப்புலவு மக்கள் தொடா்பாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக  ரவிகரன் தெரிவிக்கையில்,  2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் கொண்டுவரப்பட்டது தொடக்கம் இன்றளவும் மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கான தொடா்ந்தும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றாா்கள்.

போருக்கு முன்னர் அந்த மக்கள் எவாிடமும் கையேந்தாமல் தமது சொந்தக் காலில் வாழ்ந்தவர்கள். அந்த மக்கள் ஆளுநா் கூறுவதைபோல் இன்று மாற்றுக் காணிகளைக் கேட்கவில்லை. மாற்று காணிகள் தேவை என்றால் அதனை அந்த மக்கள் எப்போதோ பெற்றிருப்பாா்கள்.

குறித்த காணிகள் தொடர்பான ஆவணங்கள் இல்லை என ஆளுநா் கூறுவது விந்தையாக இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு இறுதிப் போாில் எல்லாவற்றையும் விட்டுச்சென்ற மக்களிடம் ஆவணங்களை கேட்க முடியுமா?

ஆனாலும் சில மக்கள் ஆவணங்களை வைத்திருக்கின்றாா்கள். மேலும் பிரதேச செயலக தகவல்களின் படி 59.5 ஏக்கர் காணி மக்களுக்கு உரித்தானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கேப்பாபிலவு மக்கள் கடந்த 2 வருடங்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வீதியில் நின்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் துாண்டுதலில் மக்கள் போராடுகிறார்கள் என ஆளுநா் கூறியுள்ளார். இதன் பின்னர் தமிழ் ஆளுநர் வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தமிழ் ஆளுநரை கொடுத்துள்ளார்களா? என நினைக்கத் தோன்றுகிறது.

அந்த மக்கள் சுயமாக தங்களுடைய வாழும் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவா்களுக்குப் பின்னால் எவரும் இல்லை. அதனை ஆளுநர் கேப்பாபிலவு மக்களுடன் தங்கியிருந்து உறுதிப்படுத்தி கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7