LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, February 25, 2019

குச்சவெளி கலப்பு கிராமிய மீனவர் அமைப்பு ஆர்ப்பாட்ட பேரணி


குச்சவெளி கலப்பு கிராமிய மீனவர் அமைப்பு தமது வாழ்வார தடையை நீக்கி பெரிய கரச்சை பகுதியில் வாழ்வாதாரம் செய்ய வழிவிடுமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றையும் குச்சவெளி பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரனுக்கு மகஜர் ஒன்றையும்    இன்று (25) கையளித்துள்ளனர்.

இது தொடரபாக நாவட்சோலை விநாயகர் கலப்பு கிராமிய மீனவர் அமைப்பின் செயலாளர் தங்கராசா மகாலிங்கம் இவ்வாறு தெரிவிக்கிறார்.றைகம் உப்பள நிறுவனம் 2009 மு் ஆண்டில் இருந்து பெரிய கரச்சை நீர்ப்பரப்பையும் அதன் சூழலில் 1805 ஏக்கரை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
இதில் 450 ஏக்கர் காணி உப்பளத்திற்கும் 37 ஏக்கர் காணி தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது


மிகுதி 1318 ஏக்கர் கரச்சை நீர்ப்பரப்பில் சிறுகடல் தொழில் மேற் கொள்ளுத் மீனவர்கள் மீன் இறால் நண்டு வளரப்புக்கென ஒதுக்கப்பட்டது.ஆனால் அவ்விடத்தில் பெரிய மணல் மேடுகளை அமைத்துள்ள போதும் அவற்றில் மீன் பிடித்திட்டங்களை றைகம் நிறுவனம் நடைமுறைப்படுத்த வில்லை.
எனவே இந்த  வெறுமனே மணல் மேடுகள் மட்டும் இருப்பதனால் கடல் நீரோ அற்று வெள்ளமோ கரச்சைக்குள்  சங்கமிக்கததால் இப்பகுதியில் மீன் வளம் குற்றியுள்ளது.

ஈகவே றைகம் நிறுவன செயற்பாடுகளுக் கென ஒதுக்கப்பட்ட காணிகளை தவிர மிகுதியாக உள்ள பகுதி 1318 ஏக்கர் காணியை விடுவித்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிலைபெற வழிவகுக்க வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியும் மகஜர் கையளிப்பும் இடம் பெற்றது

மேலும் 2018.09.11.அன்று திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றில் 1000 ஏக்கர் காணியை றைகம் நிறுவனம் மீள கையளிப்பதாகவும் அதனை மீனவர்களின் மீன் மீடி நடவடிக்கைக்காக விடுவிப்பதாகவும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இன்றுடன்05 மாதங்கள் கடந்த நிலையிலும் இது நடைமுறைக்கு வராத நிலையில் நாம் இந்த போராட்டத்தை முன் னெடுத்துள்ளோம் .என செயலாளர் தங்கராசா மகாலிங்கம் தெரிவித்தார்.

(அ . அச்சுதன்)











 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7