எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற திராவிட கழக சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “தி.மு.க.வும், தி.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கருணாநிதி கூறினார். இவை இரண்டும் இரட்டை குழல் துப்பாக்கி மட்டும் அல்ல, காவல் தெய்வங்களாக விளங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த 2 கழகங்கள் இருக்கின்ற வரை எத்தனை காவிகள், மத அமைப்புகள், சாதி அமைப்புகளை அழைத்துக்கொண்டு வருகைவந்தாலும் திராவிட இயக்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது.
அந்தவகையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. அவர் மீண்டும் பிரதமராக வரும் வாய்ப்பு கிடையாது. ஆட்சி மாற்றம் நிச்சயம் வரப்போகின்றது. அதற்கு தி.மு.க. காரணமாக அமையப்போகின்றது. பிரதமர் ராகுல்காந்திதான் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம்” என்று தெரிவித்தார்.