LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 24, 2019

ஜெயம் ரவியின் புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு

‘அடங்க மறு’ திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயம் ரவி தற்போது ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி ‘ஸ்கீரின்சீன்’ நிறுவனம் தயாரிக்கும் 3 திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த 3 புதிய திரைப்படங்கள் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

‘ஸ்கீரின்சீன்’ நிறுவனம் தயாரிப்பில் ‘தடம்’, ‘சண்டக்கோழி 2’, ‘நீயா’ மற்றும் ‘இருட்டு’ போன்ற திரைப்படங்களை தயாரித்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7