சட்டமா அதிபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய இவ்வாறான ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார்.
சிகரெட் மற்றும் மதுபான பாவனையை ஒழிப்பது தொடர்பான செயலமர்வில் பேராசிரியர் பாலித அபயகோன் உரையாற்றினார் இதன்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை 2011 ஆம் ஆண்டில் அறிமுகம்செய்த சட்டத்தினால் மதுபானங்களுக்கும், சிகரெட்டுக்களுக்கும் அடிமையானவர்களின் எண்ணிக்கை 15 வீதமாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே இன்றைய சூழலில் அதிகரித்து வரும் மது மற்றும் சிகரெட் பாவனையைக் குறைக்க இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.