அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரத்தின் அருகே உள்ள விரிகுடாவிற்குள் குறித்த விமானம் நேற்றிரவு விழுந்து நொருங்கியது.
இவ்விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாவது நபரைத் தேடும் பணிகளில் மீட்புப் பணி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Amazon நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தச் சரக்கு விமானம் நேற்றிரவு மியாமியிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 12.40 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இவ்விபத்துத் தொடர்பாக அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இவ்விசாரணைகளுக்கு உதவ Boing நிறுவனம் விசேட குழு ஒன்றை விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.