கல்வியமைச்சில் இயங்கிய ஆசிரியர் இடமாற்ற சபையில் அங்கத்துவராகவுள்ள குறித்த தேரர் அந்த சபையூடாக வழங்கப்படுகின்ற இடமாற்றங்களை மாற்றியமைக்க இலஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த தேரர் தொழிற்சங்கம் ஒன்றின் பிரதான பதவியை வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதுதொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் தன்னிடம் கையளிக்குமாறும் கல்வியமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.