LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, February 24, 2019

டெஸ்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் அம்லா முன்னேற்றம்!

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம் ஹசிம் அம்லா, டெஸ்டில் அதிக ஓட்டங்களை பெற்ற 2-வது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த அவுஸ்ரேலியா அணியின் வீரர் ஸ்டீவ் சிமித் தற்போது 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் இடம்பெற்ற 2-வது டெஸ்டில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 2-வது இன்னிங்சில் 32 ஓட்டங்களை பெற்றார். இதில் 4 ஓட்டங்களை பெற்றபோது அவர் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 2-வது தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்.

குறித்த பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கலிஸ் 13,206 ஓட்டங்களுடன் (166 டெஸ்ட்) முதலிடத்தில் உள்ளார்.அம்லா 124-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி 9282 ஓட்டங்களை பெற்று இரண்டாவது இடத்திலும், சிமித் 9253 (116 டெஸ்ட்) ஓட்டங்களை பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7