இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி இடம்பெற்றது.
இதில் இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டோக் (If Beale Street Could Talk) படத்தில் நடித்த ரெஜினா கிங் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார்.
சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என்ற பிரிவுகளில் பிளாக் பேந்தர் திரைப்படத்திற்கு ஆரம்பத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரோமா படத்திற்காக அல்போன்சோ குவாரோன் பெற்றார். சிறந்த ஒலி படத்தொகுப்புக்கான ஒஸ்கார் விருது போகிமியன் ராப்சோடி படத்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை அமெரிக்காவின் ரமி மலிக் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை தி ஃபேவரைட் (the Favourite) திரைப்படத்தில் தோன்றியமைக்காக நடிகை ஒலிவியா கோல்மன் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை, மெக்ஸிக்கோவின் புதிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒன்றான “போராஸ்” என்ற காப்பாற்றப்பட்ட நாயை வைத்து உருவாக்கப்பட்ட ரோமா திரைப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஒஸ்கார் விருது வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் 1970களில் நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட 8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.
2019 ஆஸ்கர் விருதுகள் பட்டியல்
சிறந்த திரைப்படம் – க்ரீன் புக்
சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான், (ரோமா)
சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)
சிறந்த நடிகர் – ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)
சிறந்த துணை – நடிகை ரெஜினா கிங்,
சிறந்த துணை – நடிகர் மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)
சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)
சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன்
சிறந்த திரைக்கதை – க்ரீன் புக்
சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக் லான்ஸ்மேன்
சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்
சிறந்த பாடல் தனி – (எ ஸ்டார் இஸ் போர்ன்)
சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ
சிறந்த குறும்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்
சிறந்த உயிரோட்டமுள்ள குறும்படம் – ஸ்கின்
சிறந்த அனிமேட்டட் குறும்படம் – பாவோ
சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்
சிறந்த ஆடை வடிவமைப்பு – ப்ளாக் பேந்தர்
சிறந்த ஒப்பனை – வைஸ்
சிறந்த இசை தொகுப்பு – பொஹிமியான் ராப்சோதி
சிறந்த இசை கலவை – பொஹிமியான் ராப்சோதி
பெஸ்ட் விசுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்
சிறந்த எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோடி