ஐஸ்லாந்தில் உள்ள உலகின் முதல் திறந்த பெலூகா இயற்கை நீர்பரப்புக்கே அவை கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த இரண்டு வௌ்ளைத் திமிங்கிலங்களுக்குமான பிரியாவிடை நிகழ்வு சீன நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட பார்வையாளர் ஒருவர் கூறுகையில், “இந்த இரண்டு பெலூகா திமிங்கிலங்களும் இயற்கையான கடல் சூழலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிந்து கொண்டோம். எனவே, அவை விடைபெறுவதற்கு முன்னதாக திமிங்கிலங்களின் திறமைகளையும், விளையாட்டுகளை காண்பதற்காக எனது குழந்தையை உடனடியாக அழைத்து வந்தேன்” என்று கூறினார்.
இன்றைய நிகழ்வின் பின்னர் ஷங்காய் காட்சியக அதிகாரிகள், திமிங்கிலங்களை ஆசீர்வதிக்கும் அட்டைகளையும், அவற்றின் உருவப்படம் பொரித்த இலட்சினைகளையும் பகிர்ந்தளித்தனர்.
இதன்படி, குழந்தைகளும், பெற்றோர்களும் “Xiaobai” மற்றும் “Xiaohui” க்கு தங்களின் ஆசிகளை எழுதி, கையெழுத்திட்டுள்ளனர். இந்தநிலையில், குறித்த இரண்டு பெலூகா திமிங்கிலங்களும் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் சிறப்பு பயிற்சிகளை பெற்று வருகின்றன.
நீரில் தரத்தை ஏற்றுக்கொள்ளுதல், ஆழ்கடல் சுவாசத்தை சரிசெய்து கொள்ளுதல், உணவுக் கட்டுப்பாடு மற்றும் முன்னுக்கும், பின்னுக்குமாக நகர்வுகளைச் சரிசெய்து கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் இதன்போது வழங்கப்பட்டுள்ளன.