இவர்களின் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கணிப்பிடும் மந்திரி இணையத்தளம் (Manthri.lk) வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு, அவர்கள் விவாதங்களில் கலந்துகொள்வது உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகள் குறித்தோ அல்லது வேறு கருத்துக்களையோ நாடாளுமன்றத்திற்குள் பேசியிருக்கவில்லை.
அந்த வகையில், சரத் அமுனுகம, இந்திக பண்டார, தரநாத் பஸ்நாயக்க, லக்ஸ்மன் செனவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, லோஹன் ரத்வத்த, ஸ்ரீபால கம்லத், ஜனக பண்டார தென்னக்கோன், தேனுக்க விதானகமகே, துலிப் விஜயசேகர ஆகியோருடன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் ஆறுமுகன் தொண்டான் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.
கடந்த வருடத்தில் 77 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றிருந்தன. இதில் பட்டியலிடப்பட்ட குறித்த உறுப்பினர்கள் 30க்கும் குறைவான அமர்வுகளிலேயே கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் லக்ஸ்மன் வசந்த பெரேரா 16 அமர்வில் மட்டுமே கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.