கடந்த வருடம் இதே மாதம் மிகவும் குளிரான காலமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் உறைபனிக் குளிர் நிலவியதுடன் 15cm உயரத்திற்கு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் வானிலை அவதானிப்பு நிலையத்தினால் விடுக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு சைபீரியாவில் இருந்து மேலெழுந்து வந்த மிகக்கடுமையான குளிர் காற்றே பிரித்தானியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவைத் தோற்றுவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் இது குளிர்காலமாகும். ஆனால் இந்த பெப்ரவரி மாதத்தில் வரலாற்றில் இல்லாதவாறு வெப்பநிலை மிகஉயர்வாக உள்ளது. இந்த வெப்பநிலை நாளையும் தொடரும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பசுமைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கரோலின் லூக்காஸ் தெரிவிக்கையில்; இது உலகளாவிய கின்னஸ் உலக சாதனை அல்ல, இது ஒரு காலநிலை அவசரநிலை ஆகும். எனவே அமைச்சர்கள் காலநிலை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
வானிலை ஆய்வு மைய வானிலை ஆய்வாளர் லூயி மியால் கூறுகையில்; காலநிலையில் கடுமையான மாற்றம் ஏற்படுகின்றபோது இவ்வாறு வித்தியாசமான நிலையைத் தோற்றுவிக்கின்றது என்று தெரிவித்தார்.