இன்றையதினம் வேல்ஸிலுள்ள ட்ரோஸ்கோட் (Trawsgoed) பகுதியில் 20.3C ஆக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் மிகக் கடுமையான உறைபனிக் குளிர் மக்களை வாட்டி எடுத்திருந்தது. இக்குளிர்நிலையை beast from the east என பிரித்தானிய ஊடகங்கள் வர்ணித்திருந்தன.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உயர்ந்த அளவான வெப்பநிலையாக இன்று 20.3C ஆக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் இதே மாதத்தில் வெப்பநிலை 1998 இல் கிறினிச் இல் 19.7C பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் அதனைவிடவும் உயர்வான வெப்பநிலை தென்மேற்கு லண்டன் பகுதியான ஹம்ப்டனில் (Hampton) 20.1C இன்று பதிவாகியுள்ளது.
எல் நினோ காலநிலை காரணமாக புவியின் சில பகுதிகளில் அதிக வெப்பமும் ஏனைய சில பகுதிகளில் அதிக குளிர் மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.