தென்னாபிரிக்கா அணி சொந்த மண்ணில், இலங்கை கிரிக்கெட் அணியுடன் தற்போது ஒருநாள் தொடரில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே தென்னாபிரிக்கா அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணியிடம் இழந்துள்ள நிலையில், அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியே ஆக வேண்டுமென்ற முனைப்பில் உள்ளது.
இதற்கிடையில் இந்த ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில், வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி மீண்டும் அணிக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ரி-20 போட்டியின் போது, முழங்கால் காயத்திற்கு உள்ளான லுங்கி நிகிடி, சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரை தவறவிட்டிருந்தார்.
இதுதவிர 14பேர் கொண்ட அணியில், 25வயதான வேகப்பந்து வீச்சாளர் என்ரிச் நொர்டே (யுசெiஉh ழேசவதந), ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெறுகிறார்.
துடுப்பாட்ட வீரரான அஷிம் அம்லா, லின்டா சொன்டி மற்றும் எய்டன் மார்க்கிரம் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
சகலதுறை வீரரான டுமினி தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரும் அணியிலிருந்து விலகியுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
டு பிளெஸிஸ் தலைமையிலான அணியில், குயிண்டன் டி கொக், ரீஸா ஹென்ரிக்ஸ், இம்ரான் தஹீர், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, என்ரிச் நொர்டே, என்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், கார்கிஸோ ரபாடா, டப்ரைஸ் சம்ஸி, டேல் ஸ்டெயின், ராஸ்ஸி டர் டஸன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.