LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 29, 2019

யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவிகள்?

விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகள் பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் படைத்துறைப் பதவிகளில் மிக உயரிய விருதாக பீல்ட் மார்ஷல் பதவி காணப்படுகின்றது. குறித்த பதவியை வழங்கும் அதிகாரத்தை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கின்றார்.

இறுதி யுத்தத்திற்குத் தலைமை வகித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவியை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் தொடர்புபட்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7