ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மிகப்பிரபலமாக இருக்கும் வட்ஸ் அப்பில் பல ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமான செய்திகள், படங்கள் அண்மைக்காலமாக பரிமாறப்பட்டன.
இதன்காரணமாக பல இடங்களில் சமூக வன்முறைகள் தோற்றம் பெற்றதையடுத்தே அப்புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான குறித்த கட்டுப்பாடு தற்போது உலகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.