இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள குடியிருப்பாளர்ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களிடம் விபரித்தார்.
எவ்வாறாயினும் இந்த பிராந்தியத்தில் சமாதான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றது.
சவுதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதன் போர் விமானங்கள் சனாவில் உள்ள ஆளில்லா விமான நடவடிக்கைகளுக்கான ஏழு இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அவை எதிர்தரப்பினரான ஹவூதி போராளிகளுக்கு சொந்தமானயாகும். யேமனில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது.
இது சவுதி ஆதரவு ஜனாதிபதியான அப்ட்-ரபு மன்சோர் ஹாதியின் அரசாங்கத்திற்கு எதிராக ஈரானிய – சார்பு ஹவுதி இயக்கத்தினர் மேற்கொண்டு வரும் போராட்டமாக உள்ளது.
இந்த போராட்டத்தின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல லட்சம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.