தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் தம்பலகாமம் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய தேசிய தைப்பொங்கல் விழா இன்று (19)சனிக் கிழமை தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இடம் பெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளுடன் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
1000 இளைஞர் யுவதிகள் பலரின் பங்கேற்றலுடன் இத் தைப் பொங்கல் விழா இடம் பெற்றது.
இன நல்லிணக்கத்துக்கான ஒரு அடையாளமாக இப் பொங்கல் விழாவில் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் பங்கேற்றர்கள்.
இவ் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி எரந்த வெலியங்க ,முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,தம்பலகாம பிரதேச செயலாளர் திருமதி ஜே.ஸ்ரீபதி, தம்பலகம பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றார்கள்.
(அ . அச்சுதன்)