வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அமைப்புக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பன்முக நிதி மூலம் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதேச செயலக எழுதுவினைஞர் எஸ்.ரவிச்சந்திரன், பிரதேச மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எட்டு கிராமமட்ட அமைப்புக்ளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் ஒலிபெருக்கி சாதனங்களும், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம், அறநெறிப்பாடசாலை ஆகிய அடங்களாக எட்டு சங்கங்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் கதிரைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு பாலர் பாடசாலைக்கு தொலைக்காட்சி பெட்டி, கிண்ணையடி மற்றும் கறுவாக்கேணி மரண சங்கத்திற்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் கூடாரங்கள்; மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பத்து இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
(பாண்டி)