கடந்த 2017ம் ஆண்டு வொஷிங்டனில் நடைபெற்ற இந்தப் பேரணியின் மூன்றாவது ஆண்டு ஊர்வலமாகவே ரொறண்ரோவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இடம்பெற்ற குறித்த பேரணி குயீன்ஸ் பார்க்கில் நிறைவு பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்லாயிரக் கணக்கான மக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக குரல் கொடுக்கும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றிருந்தனர்.