நேற்று முன்தினம் (15ம் திகதி) காலை 10.30 மணிக்கு செபமாலை, மறையுறை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு, தேவமாதாவுக்கும் புனித அந்தோனியாருக்கும் பொன் மகுடம் சூட்டப்பட்டது.
இரவு 7 மணிக்கு கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாய ஜோசப், இஞ்ஞாசியார்புரம் பங்கு தந்தை அந்தோனி தாஸ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில், கூடங்குளம் பங்கு தந்தை மரிய அரசு, தாளமுத்து நகர் பங்கு தந்தை இருதயராஜ் ஆகியோர் மறையுறை வழங்கினர்.
தொடர்ந்து 27ம் திகதி வரை நடைபெறும் திருவிழாவின் நவநாட்களில், காலை மற்றும் மாலை 7மணிக்கு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் செல்வஜோர்ஜ், ரேயோசில் பெப்பி, அலங்காரத்தட்டு பங்கு தந்தை ஜோன் செல்வம், வேம்பார் பங்கு தந்தை ஆலிபன் ஜோர்ஜ், தூத்துக்குடி புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை சுசிலன், சேவியர் இல்லம் பன்னீர் செல்வம், கள்ளிகுளம் பங்கு தந்தை ஜோன்சன்ராஜ், ஸ்டேட் பாங்க் கொலனி பங்கு தந்தை ஜெரோசின் ஆகியோர் தலைமையில் திருப்பலி, செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றன நடைபெறவுள்ளன.
11ம் திருவிழாவான வருகிற 25ம் திகதி காலை 7 மணிக்கு, தூத்துக்குடி புனித தோமையார் மெட்ரிக் பள்ளி ஜூலியன்ஸ் தலைமையில் நவநாள் திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவையும், இரவு 8.30 மணிக்கு புனித அந்தோனியாரின் சப்பர பவனியும் நடைபெறவுள்ளது.
12ம் திருவிழாவான 26ம் திகதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயஜோசப் தலைமையில் நவநாள் திருப்பலி மற்றும் ஞானஸ்நானம் வழங்குதலும், மாலை 7 மணிக்கு 95வது ஆண்டு திவ்ய நற்கருணை பவனியும், குரூஸ்புரம் பங்குதந்தை உபர்ட்டஸ், இஞ்ஞாசியார்புரம் பங்குதந்தை அந்தோணிதாஸ், தாளமுத்துநகர் பங்குதந்தை இருதயராஜா, சகாய ஜஸ்டின் ஆகியோரின் மறையுரையும் இடம் பெறுகிறது.
13ம் திருவிழாவான வரும் 27ம் திகதி காலை 7மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயஜோசப், இஞ்ஞாசியார்புரம் பங்குதந்தை அந்தோனிதாஸ், தாளமுத்துநகர் பங்குதந்தை இருதயராஜா மற்றும் சகாய ஜஸ்டின் ஆகியோர் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், புதுநன்மை வழங்குதலும் நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு அமலோற்பவ மாதா, புனித அந்தோணியார் சப்பர பவனி நடக்கிறது. மாலை 7 மணிக்கு, தாளமுத்துநகர் பங்குதந்தை இருதயராஜா தலைமையில் நற்கருணை ஆசீரும், கொடியிறக்கமும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை, சிலுவைப்பட்டி இறைமக்கள் மற்றும் ஊர் நிர்வாகிகள், புனித அந்தோனியார் இளைஞர் இயக்கத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.