சென் எல்பர்ட் நகரத்தைச் சேர்ந்த ராய்மெண்ட் முசல் என்பவர் சந்தைக்கு சென்றிருந்த போது எதேச்சையாக அதிர்ஷ்ட லாப சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த சீட்டுக்கு தற்போது $7.9 மில்லியன் பரிசு விழுந்துள்ளமையை தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக கனடாவில் விற்கப்படும் லொட்டோ 649 எனப்படும் அதிர்ஷ்டலாப சீட்டில் இரண்டு நபர்களுக்கு சேர்ந்து 15.8 மில்லியன் டொலர்கள் முதல் பரிசு வழங்கப்படும். அதில் முசலுக்கு 7.9 மில்லியன் டொலரும், ஒன்றாறியோவை சேர்ந்த மற்றொருவருக்கு மிகுதி பரிசும் கிடைத்துள்ளது.
இது குறித்து முசல் கூறுகையில், “என்றாவது நமக்கும் பரிசு கிடைக்கும் என்று தான் பொதுவாக மக்கள் அதிர்ஷ்டலாப சீட்டுகளை கொள்வனவு செய்கிறார்கள்.
ஆனால் நான் எதேச்சையாக தான் அதனை வாங்கினேன். இவ்வாறு பெரிய தொகையில் எனக்கு பரிசு கிடைத்தாலும் நான் நிலையான மற்றும் சாதாரண வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். இந்த பணத்தை வைத்து டிரக் லொறி மற்றும் வீடு வாங்கும் திட்டம் உள்ளது.
சில ஆண்டுகளாக நான் இசைப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகிறேன், தற்போது என்னுடைய இரண்டாவது இசைப்பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை விளம்பரப்படுத்தவும் இந்த பரிசுத் தொகையை பயன்படுத்துவேன்” என்று ராய்மெண்ட் முசல் கூறியுள்ளார்.