பாட்னாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாயாவதியும், அகிலேஷ் யாதவும் என்னைவிட அரசியலில் மூத்தவர்கள். மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்து பேசினேன். அவர்களுடன் கூட்டணி தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை.
காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி என்பது மிக பழமையான கூட்டணி. எனது தந்தை லல்லு பிரசாத்தும், சோனியா காந்தியும் பரஸ்பர நம்பிக்கையுடன் இக்கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
காங்கிரசைப் பொறுத்தவரை தேசிய அளவில் மிகப்பெரிய அரசியல் கட்சி. அதனுடன் நல்ல கூட்டணியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதில் மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.