மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே உதயகுமார் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“மக்களின் தேவையை கருத்திற்கொண்டு அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் வடக்கு- கிழக்கில் கல்வி, பொருளாதாரம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. ஆகையால் அரசாங்கத்தின் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் கல்வி, பொருளாதாரம், விவசாயம், உள்ளிட்ட அனைத்திலும் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதேவேளை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வறுமை நிலையை போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.
ஆனாலும், இம்மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முன்வருவார்களாயின் அதுவே பேருதவியாக அமையும்” என மா.உதயகுமார் தெரிவித்துள்ளார்.