புதிய சி.பி.ஐ. இயக்குனரை தெரிவு செய்யும் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இடம்பெற்றுள்ளதாலேயே, இவ்வழக்கிலிருந்து தான் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்
அத்தோடு, சி.பி.ஐ. புதிய இயக்குனர் தெரிவு, நியமனம் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை ஜனவரி 24 ஆம் திகதி வேறொரு அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ. இயக்குனர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டதையடுத்து இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் சி.பி.ஐ.க்கு புதிய இயக்குனரை தெரிவு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம் ஜனவரி மாதம் 24ஆம் திகதி பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் பிரசாத் பூஷண் சார்பில் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணைகளிலிருந்தே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.