அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்காக கிண்ணியாவில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் நேற்று (13)
முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் கிராமமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூறா மற்றும் கிண்ணியா உலமா சபை ஆகியவற்றின் முயற்சியினால் பள்ளிவாசல்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நான்கு இலட்சம் ரூபாவைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதற்கான வைபவம்
மு/தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு ஜம்மியதுல் உலமா சபையுடன் இணைந்து கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபை, கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா மற்றும் பள்வாசல் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிகள் கலந்து கொண்டு பொருட்களை விநியோகித்தனர்.
இதன்போது, மாணவர்களுக்கான பயிற்சிப்புத்தகங்கள்,கற்றல் உபகரணங்கள் உள்ளடங்கலாக உலர் உணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்து கிருஸ்தவ மதகுருக்கள், பிரதேச செயலாளர், அதிபர், ஆசிரியர் மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் இனம் மதம் கடந்த இப்பணியை மிகவும் வரவேற்று உபசரித்து கிண்ணியாமக்களுக்கு நன்றி கூறினர்.
(அ . அச்சுதன்)